தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்வு


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 April 2020 4:30 AM IST (Updated: 26 April 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் ஒரே நாளில் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

தஞ்சாவூர், 

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் ஒரே நாளில் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

55 பேர் பாதிப்பு

உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இவர்களில் ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்நபரான கும்பகோணத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி சிகிச்சை பெற்று குணமடைந்ததை தொடர்ந்து கடந்த 16-ம் தேதி வீட்டிற்கு திரும்பினார். இதேபோல் 21-ம் தேதி 3 பேரும், 23-ம் தேதி 3 பேரும், நேற்று முன்தினம் ஒருவரும் என மொத்தம் 8 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரே நாளில் 10 பேர்

இவர்களைத் தொடர்ந்து அதிராம்பட்டினத்தை சேர்ந்த 7 பேரும், தஞ்சை, நெய்வாசல், நெல்லை மாவட்டம் பத்தமடை கிராமத்தை சேர்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 10 பேர் குணமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் பெண்கள். 4 பேர் ஆண்கள்.

சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பிய அவர்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதாலிங்கராஜ், மருத்துவ கண்காணிப்பாளர் மருதுதுரை உள்ளிட்டோர் சான்றிதழ், பழங்கள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிகிச்சை முடிந்து செல்பவர்கள் வீட்டில் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி னர்.

37 பேருக்கு சிகிச்சை

இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story