கொரோனா வைரஸ் தடுப்பு பணியாளர்களுக்கு உபகரணங்கள் - கலெக்டர் வழங்கினார்


கொரோனா வைரஸ் தடுப்பு பணியாளர்களுக்கு உபகரணங்கள் - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 April 2020 4:45 AM IST (Updated: 26 April 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் உபகரணங்களை கலெக்டர் கண்ணன் வழங்கினார்.

விருதுநகர், 

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அனைத்துதுறைகளும் ஒருங்கிணைந்து செய்து வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு பணியாற்றி வருபவர்களின் பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் இருக்கும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கு முக கவசங்கள், உபகர ணங்களை சம்பந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்களிடம் கலெக்டர் கண்ணன் வழங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் மனோகரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஷ்ணுபரன், மருத்துவ நலப்பணிகள் துணை இயக்குனர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story