15,771 பேருக்கு வீடு தேடி சென்று ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது - அஞ்சலக அதிகாரி தகவல்
15 ஆயிரத்து 771 பேருக்கு வீடு தேடி சென்று ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது என்று அஞ்சலக அதிகாரி அமுதா கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய தேவை உள்ளவர்களுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை ஆகியவற்றை வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஏ.இ.பி.எஸ். சேவை திட்டத்தின் மூலம் அஞ்சலக ஊழியர்கள், பயனாளிகளின் வீட்டிற்கே சென்று உதவித் தொகை பெறுபவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வழங்கி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அஞ்சலக ஊழியர்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் களத்திற்கு சென்று பொதுமக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.
இது குறித்து அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அமுதா கூறியதாவது:-
ஊரடங்கு காலத்தில் திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் ஏ.இ.பி.எஸ். மூலமாக பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.51½ லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் சென்னை அஞ்சல் மண்டலத்தில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடமாக திகழ்கிறது.
மேலும் 15 ஆயிரத்து 771 முதியோர் ஓய்வூதிய தொகைக்காக ஓய்வூதியம், மணிஆர்டர் ரூ.15 லட்சத்து 77 லட்சம் தபால்காரர்கள் மூலமாக மக்களின் வீட்டிற்கு சென்று வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஏ.இ.பி.எஸ். மூலமாக வங்கியில் இருந்து பணம் எடுக்க விரும்புவோர் 04175222600, 253067 மற்றும் 9384666200 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story