ஆற்றில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மீன்பிடித்து பொழுதை கழிக்கும் பொது மக்கள்
ஆற்றில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மீன்பிடித்து பொதுமக்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.
கரூர்,
ஆற்றில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மீன்பிடித்து பொதுமக்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கம்
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி விட்டாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இவ்வாறு வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் நீர்நிலைகளை நாடி செல்வதை காண முடியும். ஆனால் தற்போது ஏரி, குளங்கள் எல்லாம் வறண்டு தண்ணீரின்றி கானல் நீராக காட்சி அளிக்கின்றன.அமராவதி, காவிரி ஆறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், அப்பகுதிகளில் உள்ள ஆடு, மாடுகள் தண்ணீருக்காக அலைவதை காண முடிகிறது.
மீன்பிடித்து பொழுதை கழிக்கின்றனர்
தற்போது கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் மட்டுமல்லாமல், பள்ளி-கல்லூரி மாணவர்களும் வீட்டிற்குள் இருக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் கரூர் பகுதியில் உள்ள ஆற்றங்கரை அருகாமையில் வசிக்கும் மக்கள், ஆறுகளுக்கு சென்று குளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஆறுகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் தண்ணீரில் குளித்து விளையாடுவது, மீன்பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பொழுதை கழித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக வீட்டிற்குள் இருப்பது மிகவும் கடினமாக உள்ளது. எங்கும் வெளியில் சென்று வர முடியவில்லை. குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் சிறிது நேரம் ஆற்றங்கரை பகுதியில் தேங்கி நிற்கும் நீரில் குளிப்பது, மீன் பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பொழுதை கழித்து வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story