வாணியம்பாடி அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கும் பணி - அமைச்சர் நிலோபர்கபில் தொடங்கி வைத்தார்
வாணியம்பாடி அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் நிலோபர்கபில் தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 3-ந்தேதி வரை பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு அனைத்து அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க உத்தரவிட்டார். அதன்படி வாணியம்பாடி சந்தை மைதானத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு இலவச உணவு வழங்க அ.தி.மு.க. சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நிதியுதவி அளித்து, உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பொதுமக்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அம்மா உணவகத்தில் தினமும் 900 பேருக்கு உணவு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், நகர செயலாளர் சதாசிவம், அவைத் தலைவர் சுபான், தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story