அம்மாபேட்டை அருகே எளிய முறையில் நடந்த திருமணம்; அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்


அம்மாபேட்டை அருகே எளிய முறையில் நடந்த திருமணம்; அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்
x
தினத்தந்தி 27 April 2020 4:45 AM IST (Updated: 27 April 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே எளிய முறையில் நடந்த திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். அவருடைய மனைவி மாலதி. இவர்களுடைய மகன் அரவிந்த். சாப்ட்வேர் என்ஜினீயர். ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கிரிவாசு. அவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய மகள் சுபாஷினி. இவர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

அரவிந்துக்கும் சுபாஷினிக்கும் நேற்று திருமணம் நடத்த கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மேலும் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் திருமணம் நெரிஞ்சிப்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலில் எளிய முறையில் நடந்தது. இதில் மணமகள் வீட்டில் இருந்து 10 பேரும் மணமகன் வீட்டில் இருந்து 10 பேரும் என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர். மணமக்கள் உள்பட அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர்.

Next Story