முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் கடைகள் அடைப்பு
முழு ஊரடங்கையொட்டி கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 17 பேர், அவர்களின் தொடர்பில் இருந்த 9 பேர் என 26 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று மாலை வரை 8 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவப்பு மண்டலம்
15-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலே அந்த மாவட்டத்தை சிவப்பு மண்டலமாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர். இதன்படி கடலூர் மாவட்டத்தில் 3 நகராட்சி பகுதிகள், 7 பேரூராட்சி பகுதிகள் என 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சிவப்பு மண்டலத்தில் வருகிறது.
இந்த பகுதியை 7 கிலோ மீட்டர் தூரம் தனிமைப்படுத்தி, அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், அப்பகுதிக்குள் வெளிநபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் இருக்க ஒரு நாள் முழு ஊரடங்கு உத்தரவை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் பிறப்பித்தார். மேலும் வீட்டை விட்டு வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கடைகள் அடைப்பு
இதையடுத்து நேற்று மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே தினமும் திறக்கப்பட்ட அத்தியாவசிய பொருளான மளிகை, காய்கறி, பால் கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டன. தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளாக செயல்பட்டு வந்த மஞ்சக்குப்பம் மைதானம், பஸ் நிலையம், முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவையும் மூடப்பட்டன. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. குறிப்பாக இம்பீரியல் சாலை, பாரதிசாலை, லாரன்ஸ்ரோடு, நேதாஜி சாலை உள்பட பல்வேறு சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில இடங்களில் தெருக்களில் வெளியே வந்தவர்களை வருவாய்த்துறையினர் விரட்டி விட்டனர்.
கண்காணிப்பு
அதேபோல் போலீசாரும் தற்காலிக சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெளியே வந்த ஒரு சிலரும் போலீசாரை பார்த்ததும் அவர்கள் கண்ணில் படாமல் தலைமறைவாகி விட்டனர். மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன. ஆனால் மருந்து கடைகள் மட்டும் ஒரு சில இடங்களில் திறந்து இருந்தது. அதிலும் மருந்து, மாத்திரைகள் வாங்க குறிப்பிட்ட சிலரே வந்து சென்றதை பார்க்க முடிந்தது.
ஏற்கனவே முழு ஊரடங்கு உத்தரவை கலெக்டர் அறிவித்ததால், நேற்று முன் தினமே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பண்ருட்டி, விருத்தாசலம், நெல்லிக்குப்பம், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

Related Tags :
Next Story