திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் இருந்து நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்


திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் இருந்து நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 27 April 2020 4:32 AM IST (Updated: 27 April 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

திருவாரூர், 

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

12 பேர் குணம் அடைந்தனர்

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 பேரும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 33 பேரும் என மொத்தம் 50 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் முழுவதுமாக குணம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு முன்பாக தனித்தனியாக அமர வைக்கப்பட்டனர். பின்னர் மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் உற்சாகமாக கைதட்டி அவரவர் வீடுகளுக்கு தனி ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பிய அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

38 பேர் சிகிச்சையில் உள்ளனர்

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 50 பேரில் நேற்று 12 பேர் குணம் அடைந்து சென்று விட்டதால் மீதம் உள்ள 38 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story