நலவாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் தூய்மை பணியாளர்கள் நிவாரண உதவிகளை பெறலாம் நாகை கலெக்டர் தகவல்
நலவாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் தூய்மை பணியாளர்கள் விவரங்களை தெரிவித்து நிவாரண உதவிகளை பெற்று பயன்பெறலாம் என நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்,
நலவாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் தூய்மை பணியாளர்கள் விவரங்களை தெரிவித்து நிவாரண உதவிகளை பெற்று பயன்பெறலாம் என நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிவாரண உதவி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீ்ட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணிபுரிவோர் நல வாரியம் மூலமாக 2008-ம் ஆண்டில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணியாளருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டையை வைத்திருப்போர் தற்போது பணிபுரிந்தாலும் அல்லது ஓய்வு பெற்றிருந்தாலும் அதன்கீழ் வழங்கப்படும் நிவாரண உதவிகளை பெற்று பயன்பெறலாம். இதுபற்றிய விவரங்களை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்திலும், dmtahdcongp@gmail.com, dmngptahdco@yahoo.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலும் தெரிந்து கொள்ளலாம்.
அடையாள அட்டை விவரம்
04365-250305, 94450 29466, 99407 29643 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் தூய்மை பணியாளர்கள் தங்களின் பதிவு எண்ணுடன் மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு தங்கள் அடையாள அட்டை விவரத்தை படம் எடுத்து அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story