அம்மா உணவகத்தில் முட்டையுடன் உணவு - மணிகண்டன் எம்.எல்.ஏ. வழங்கினார்
ராமநாதபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ. பொது மக்களுக்கு முட்டையுடன் உணவு வழங்கினார்.
ராமநாதபுரம்,
கொரோனா தடுப்பு ஊரடங்கால் ஏழை மக்கள் பசியால் வாடாமல் இருக்க அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் அதற்கான செலவுத்தொகை அ.தி.மு.க. சார்பில் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், கீழக்கரை, ராமேசுவரம் நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு வழங்க ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்திற்கான காசோலையை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ. நகராட்சி ஆணையாளரிடம் வழங்கினார்.
அதன்படி ராமநாதபுரம் அம்மா உணவகத்தில் வெஜ் பிரியாணி, தயிர்சாதம், முட்டை போன்ற சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. உணவு வழங்கும் பணியை மணிகண்டன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும் உணவின் தரத்தையும் சோதனையிட்டார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், ராம்கோ தலைவர் செ.முருகேசன், ராம்கோ இயக்குனர் சசிகுமார், நகர் பொருளாளர் ஜெயக்குமார், தஞ்சி சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story