கலவை அருகே மழையில் நனைந்த நெல் மூட்டைகள் விவசாயிகள் வேதனை


கலவை அருகே மழையில் நனைந்த நெல் மூட்டைகள் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 27 April 2020 10:13 AM IST (Updated: 27 April 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே மழையில் நனைந்த நெல் மூட்டைகள் விவசாயிகள் வேதனை.

கலவை,

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் மாம்பாக்கம், சென்னசமுத்திரம், வெள்ளம்பி ஆகிய கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் உள்ளன. இங்கு, விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை கலவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பலத்த பெய்தது. அதில் மாம்பாக்கத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள் கோவில் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த நெல் மூட்டைகள் எடை போடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று பெய்த திடீர் மழையால் அந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து விட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


Next Story