புதுக்கோட்டையில் ஊரடங்கு: வீடுகளில் எளிமையாக நடந்த திருமணங்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமண தம்பதி
ஊரடங்கால் புதுக்கோட்டையில் வீடுகளில் எளிமையாக திருமணங்கள் நடந்தன. கொரோனா நிவாரண நிதியை புதுமண தம்பதி வழங்கினர்.
புதுக்கோட்டை,
ஊரடங்கால் புதுக்கோட்டையில் வீடுகளில் எளிமையாக திருமணங்கள் நடந்தன. கொரோனா நிவாரண நிதியை புதுமண தம்பதி வழங்கினர்.
வீட்டில் வைத்து திருமணம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மண்டபங்களில் நடைபெறாமல் அவர்களது வீடுகளில் நடந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 2 இடங்களில் வீடுகளில் எளிமையாக திருமணங்கள் நடந்தன.
திருமயம் அருகே விராச்சிமலை கிராமத்தில், பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கடேஸ்வரனுக்கும், தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் பூரணி என்கிற புவனேஸ் வரிக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள் மட்டும் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். மேலும் மணமக்களும், உறவினர்களும் முக கவசம் அணிந்திருந்தனர்.
அன்னவாசல்
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் மற்றும் அவரது பெற்றோர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வந்தனர். மேலும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.20 ஆயிரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புதுமண தம்பதியினர் திருமணக்கோலத்தில் வழங்கினர். மேலும் அவரிடம் ஆசி பெற்றனர். அப்போது அவர், மணமக்களை வாழ்த்தினார். மேலும் திருமண ஜோடிகளுக்கு கபசுர குடிநீரை அவர் வழங்கினார். அதனை 2 பேரும் வாங்கி குடித்தனர். கலெக்டர் உமாமகேஸ்வரி யும் மணமக்களை வாழ்த்தினார். இதேபோல அன்னவாசல் அருகே உள்ள தச்சம்பட்டியை சேர்ந்த முருகேசன்-விஜயா ஆகியோரது திருமணம் மணமகனின் வீட்டில் வைத்து எளிய முறையில் நடந்தது. இதில் மணமகன், மணமகள் தரப்பில் மொத்தம் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மணமக்கள் உள்பட திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் அனை வரும் முக கவசம் அணிந்திருந்தனர்.
Related Tags :
Next Story