ஜெயங்கொண்டத்தில் போலீசாருக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கல்
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவமனை சார்பில் கபசுர குடிநீர் பொடி, சத்து மாத்திரைகள் மற்றும் முக கவசங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் போலீசாருக்கு உதவும் தன்னார்வலர்களுக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவமனை சார்பில் கபசுர குடிநீர் பொடி, சத்து மாத்திரைகள் மற்றும் முக கவசங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) பானுமதி ஆகியோர் கலந்து கொண்டு தொகுப்பினை வழங்கினர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு தொகுப்பினை பெற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story