புதுச்சேரி அரசு அனுமதிக்காததால் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பாதுகாப்பின்றி நிற்கும் மதுபான லாரிகள்
புதுச்சேரி அரசு அனுமதிக்காததால் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பாதுகாப்பின்றி மதுபான லாரிகள் நிற்கின்றன.
விழுப்புரம்,
கோவா மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் 21-ந் தேதி ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் 11 லாரிகளில் ஏற்றப்பட்டு புதுச்சேரிக்கு புறப்பட்டன. மறுநாளே தமிழக எல்லையான ஒசூரை அடைந்ததும் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர்.
அனுமதி கடிதம் பெற்ற குறிப்பிட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மதுபானங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால் அதனை காரணம் காட்டி மதுபான லாரிகளை புதுச்சேரிக்கு கொண்டு வரும் அனுமதியை பெற்றனர். அதன்படி கிருஷ்ணகிரியில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த லாரிகள் புதுச்சேரிக்கு புறப்பட்டன.
பாதுகாப்பு
புதுச்சேரி மாநிலத்திற்கு செல்ல இருந்த நிலையில் மதுபானங்களை கொண்டு வருவதற்கு அம்மாநில அரசு அனுமதிக்காததால் அந்த லாரிகள் தற்போது விழுப்புரம் மாவட்ட எல்லையான பட்டானூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் திருட்டு நடந்து வரும் சூழலில் நாங்கள் ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்களுடன் பாதுகாப்பின்றி சாலையில் நிற்கிறோம். எனவே எங்களுக்கும், மதுபான லாரிகளுக்கும் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று லாரி டிரைவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், புதுச்சேரி அரசு இந்த லாரிகளை அனுமதிக்காவிட்டால் மதுபானம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டதோ அங்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Tags :
Next Story