மும்பையில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை - மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்
மும்பையில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மும்பையில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக கேட்க தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
மும்பை தாராவி போன்ற கொரோனா வைரஸ் பரவல் மையப்பகுதிகளில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடங்களை சென்றடையக் கூடிய வகையில் ரெயில்கள் மற்றும் பஸ்களை ஏற்பாடு செய்வது மத்திய அரசின் பொறுப்பாகும்.
தூண்டி விடுகிறார்கள்
வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து வீதிகளில் திரண்டால், அது அவர்களின் உடல் நலத்திற்கு பாதுகாப்பானது அல்ல. வீடு இல்லாத இந்த மக்கள் தெருக்களில் கூடினால் என்ன நடக்கும் என்பதை எங்களால் கூற முடியாது.
சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை துண்டி விடுகிறார்கள்.
ஹரித்வாரில் இருந்து குஜராத் சுற்றுலா பயணிகளை திருப்பி அழைத்து வருவதற்கு மத்திய அரசு காட்டிய வேகத்தை வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதிலும் காட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story