கடன் தவணை-வீட்டு வாடகையை குறைக்க வேண்டும்: பெரும் பணக்காரர்களின் வருவாய் மீது கொரோனா வரி - குமாரசாமி வலியுறுத்தல்


கடன் தவணை-வீட்டு வாடகையை குறைக்க வேண்டும்: பெரும் பணக்காரர்களின் வருவாய் மீது கொரோனா வரி  - குமாரசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 April 2020 5:15 AM IST (Updated: 28 April 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

பெரும் பணக்காரர்களின் வருவாய் மீது கொரோனா வரி விதிக்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரலாறு காணாத அளவில் மோசமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி உள்பட பல்வேறு பொருளாதார அமைப்புகள் கணித்துள்ளன. கடன் தவணை, வீட்டு வாடகை, கல்வி கட்டணம் உள்ளிட்டவற்றை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது மோசமான நிலையில் உள்ள பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் சரிசெய்துவிட முடியாது. வாழ்க்கையை வாழ்வதற்கான செலவை குறைக்க வேண்டியது அவசியம். நுகர்வோரின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துவிட்டது. மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும். அரசின் வருவாய் இழப்பை ஈடுகட்ட பெரும் பணக்காரர்களின் வருமானத்தின் மீது கொரோனா வரி விதிக்க வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்கள்

பொதுமக்கள் குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு திட்டங்களை அறிவிக்க வேண்டியது அவசியம். அதற்கு இதுவே சரியான தருணம். விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள், வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள், ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும்.”

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story