கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் கோடை காலம் என்று தெரியாத அளவிற்கு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் வெப்பம் நிலவியது. பின்னர் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதில் வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோலா அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வெள்ளி நீர்வீழ்ச்சியில் மழை வெள்ளம் மண்ணுடன் கலந்து பழுப்பு நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது. பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுக்கு ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இதேபோல் நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பரளி, வத்திபட்டி, கோவில்பட்டி, லிங்கவாடி, சமுத்திராபட்டி, சிறுகுடி, சீரங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அரை மணி நேரமாக காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. நத்தம் அருகே சீரங்கம்பட்டி பகுதியில் அழகர்சாமி என்பவரது தோட்டத்தில் வாழை, வேம்பு, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதே பகுதியில் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சின்னு என்ற விவசாயியின் ஆடு மீது கொட்டகையின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் இறந்துபோனது. மேலும் சில இடங்களில் கோவில், வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் அறுந்தும் விழுந்தன.

Related Tags :
Next Story