திசையன்விளை- தூத்துக்குடி சாலைகள் மூடல் போலீசார் அதிரடி நடவடிக்கை
நெல்லை மாவட்டம் திசையன்விளையை ஒட்டியுள்ள தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள் கிராமப்புற சாலைகள் வழியாக திசையன்விளை பஜாரில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.
திசையன்விளை,
நெல்லை மாவட்டம் திசையன்விளையை ஒட்டியுள்ள தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள் கிராமப்புற சாலைகள் வழியாக திசையன்விளை பஜாரில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர். அண்டை மாவட்டத்தவர்களும் வருவதால் திசையன்விளை பஜாரில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக எண்ணிய போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டம் திசையன்விளைக்கு செல்லும் அனைத்து கிராமப்புற சாலைகளையும் அடைத்தனர்.
இதனால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சென்று வாங்கி வந்த அத்தியாவசிய பொருட்களை, தற்போது 10 கிலோமீட்டர் தூரம் சென்று சாத்தான்குளத்தில் வாங்கி செல்கின்றனர். இதனால் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்பவர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, கால்நடையாக நடந்து வருபவர்களை அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்ல திசையன்விளை பஜாரில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story