கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் சென்ற இறைச்சி கடையில் கிருமிநாசினி தெளிக்க எதிர்ப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் சென்று வந்த இறைச்சி கடைக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வில்லியனூரில் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லியனூர்,
வில்லியனூரை அடுத்த சுல்தான்பேட்டையில் கோழி இறைச்சி கடை உள்ளது. இங்கு மூலக்குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த ஒருவர் வேலை செய்து வந்தார். அவர், கடந்த மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர் நேற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அவரது 22 வயது மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. அவர் கதிர்காமம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருமிநாசினி தெளிப்பு
இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அந்த வாலிபர் சென்று வந்த பகுதிகளை கண்டறிந்து, அங்கு கிருமிநாசினி தெளிக்க புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண், வில்லியனூர் சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப்புக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த வாலிபர் சென்று வந்த இடங்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.
கடந்த 25-ந் தேதி சுல்தான்பேட்டையில் உள்ள கோழி இறைச்சி கடைக்கு அந்த வாலிபர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்க வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், ஊழியர்களுடன் நேற்று காலை சுல்தான்பேட்டையில் உள்ள இறைச்சி கடை மற்றும் அருகில் உள்ள கடைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்.
எதிர்ப்பு
இதை அறிந்த இறைச்சி கடைக்காரர் அங்கு வந்து, கிருமி நாசினி தெளிக்க எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த வில்லியனூர் தாசில்தார் அருணையா, போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு ஆகியோர் அங்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் 4 பேருக்கு மேல் ஒன்று கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதையடுத்து இறைச்சி கடை உரிமையாளர் மஜித் (வயது 45) உள்பட 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இதன்பின் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் சுல்தான்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story