சோளிங்கரில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


சோளிங்கரில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 28 April 2020 8:44 AM IST (Updated: 28 April 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கரில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு.

சோளிங்கர்,

கொரோனா ஊரடங்கால் வாகனப் போக்குவரத்தைத் தடுக்க சோளிங்கரில் சித்தூர் சாலை, திருத்தணி சாலை, அண்ணாசிலை அருகில், கருமாரியம்மன் கோவில் கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனம் சோளிங்கருக்கு வந்து, பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சோதனைச் சாவடி வழியாகச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, வாகனத்தின் பதிவெண், கடந்து செல்லும் நேரம், வாகனங்களுக்குக் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா, இரு சக்கர வாகனங்களில் வருவோர் முகக் கவசம் அணிந்துள்ளனரா, அவர்கள் எதற்காகச் செல்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார்.

கொரோனா சம்பந்தமான தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு சரியான நேரத்துக்கு உணவு வழங்க வேண்டும், விட்டமின் மாத்திரைகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தன்னார்வலர்களுக்கும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

ஆய்வின்போது சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், பாஸ்கரன் மற்றும் களப் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story