சூளகிரி அருகே ரூ.9 லட்சம் மதிப்பில் குட்டை தூர்வாரும் பணி
சூளகிரி அருகே ரூ.9 லட்சம் மதிப்பில் குட்டை தூர்வாரும் பணியினை, ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் அத்திமுகம் ஊராட்சிக்குட்பட்ட கரியசந்திரம் கிராமத்தில், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் குட்டை தூர்வாரும் பணி தொடங்கியது. இதனை, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார். பாலாஜி, மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் என்ற பாபு, அத்திமுகம் ஊராட்சி தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் புஷ்பா சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story