ஊரடங்கு நேரத்தில், தஞ்சை தபால் கோட்டத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ரூ.2.10 கோடி பண பரிவர்த்தனை
ஊரடங்கு நேரத்தில், தஞ்சை தபால் கோட்டத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை மூலம் ரூ.2 கோடியே 10 லட்சம் பண பரிவர்த்தனை நடந்துள்ளது.
தஞ்சாவூர்,
ஊரடங்கு நேரத்தில், தஞ்சை தபால் கோட்டத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை மூலம் ரூ.2 கோடியே 10 லட்சம் பண பரிவர்த்தனை நடந்துள்ளது.
இது தொடர்பாக தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வீட்டில் இருந்தே பணம் எடுக்கும் வசதி
பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, தங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட பிற வங்கி கணக்கில் இருந்து பணம் பெறும் சேவையை கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தங்களது கைரேகை மூலம் எந்த ஒரு தபால் அலுவலகம் மற்றும் தபால்காரர் மூலம் ரூ.10 ஆயிரம் வரையில் கட்டணம் எதுவும் இல்லாமல் பணம் பெற்றுக்கொள்ளலாம்.
ரூ.2.10 கோடி பண பரிவர்த்தனை
இந்த சேவை வாடிக்கையாளரின் வீட்டு வாசல் அருகே தபால்காரர் மூலமும் அளிக்கப்படுகிறது. இந்த சேவையை எந்தவித கட்டணமும் இல்லாமல் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். இது ஏ.டி.எம். பரிவர்த்தனையாக கணக்கிடப்படாது. தஞ்சை தபால் கோட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையின் மூலமாக இதுவரையில் ரூ.2 கோடியே 10 லட்சத்துக்கு பணபரிவர்த்தனை நடந்து உள்ளது. பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கி வரும் இந்த ஆதார் எண் இணைக்கப்பட்ட பிற வங்கி கணக்கில் இருந்து பணம் பெறும் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story