மராட்டியத்தில் 13,448 தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி - மந்திரி சுபாஷ் தேசாய் தகவல்
மராட்டியத்தில் 13 ஆயிரத்து 448 தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என மந்திரி சுபாஷ் தேசாய் தெரிவித்தார்.
மும்பை,
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த 20-ந் தேதி முதல் அதன் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
இதன்படி பாதிப்பு குறைந்த பகுதிகளில் நிறுத்தப்பட்ட தொழிற்துறை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தியது.
இதையடுத்து மராட்டிய தொழில் மேம்பாட்டு கழகம் (எம்.ஐ.டி.சி.) தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படுவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி வருகிறது.
25 ஆயிரம் விண்ணப்பம்
இதன்படி மாநில தொழில்துறைக்கு தொழிற்சாலைகளை திறக்க அனுமதி கோரி 25 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், இதில் 13 ஆயிரத்து 448 தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் மாநில தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படும் போது சமூக விலகல் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். பொது போக்குவரத்தில் பயணம் செய்ய தேவையில்லாத அளவுக்கு ஊழியர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் செயல்பட தொடங்குவதால் தற்போது உள்ள தேக்க நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story