திருவாரூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணம் அடைந்தனர்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் நேற்று குணம் அடைந்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் நேற்று குணம் அடைந்தனர்.
இதில் ஒருவர் மியான்மர் நாட்டை சேர்்ந்தவர். மற்ற 3 பேர் நாகை மாவட்டத்தை சேர்்ந்தவர்கள் ஆவர். நாகை மாவட்டத்தை சேர்்ந்த 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலமாக அவரவர் வீட்டிற்கு, முதல்வர் முத்துகுமரன் அனுப்பி வைத்தார். மியான்மர் நாட்டை சேர்ந்தவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக சிறப்பு கொரோனா வார்டில் தனி அறையில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு சென்ற 3 பேரும் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர்்.
Related Tags :
Next Story