தி.மு.க. சார்பில் சுகாதார பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
தி.மு.க. சார்பில் பழனி ஒன்றியம், நத்தம் பகுதிகளில் சுகாதார பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பழனி,
பழனி ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் மற்றும் குடிநீர் ஆபரேட்டர்களுக்கு இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின்பேரில் தி.மு.க. சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரி கருப்புசாமி ஏற்பாடு செய்தார். அதன்படி பழனி அருகே கோதைமங்கலம் ஊராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கும், குடிநீர் ஆபரேட்டர்களுக்கும் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏழுமலையான், நாகராஜன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் சவுந்திரபாண்டியன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் பரமசிவம், ஆசியாமரியம் ஷாஜகான், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதுதவிர பழனி ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது என்று ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.
நத்தம்
இதேபோல் சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொசவபட்டி, சிலுவத்தூர், கோபால்பட்டி, வி.எஸ்.கோட்டை, செங்குறிச்சி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் 50 சுகாதார பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை தி.மு.க. சார்பில் ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ., சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஆகியோர் வழங்கினர்.
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்படவுள்ளது. அதன்படி தி.பஞ்சம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் முக கவசம் வழங்கும் பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதையடுத்து 1 லட்சம் முக கவசங்கள் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக வீடுவீடாக வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தர்மராஜன், மோகன், சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சலேத்மேரி, தேவி சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story