வெளியில் செல்ல அனுமதிக்க கோரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதம்


வெளியில் செல்ல அனுமதிக்க கோரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதம்
x

திருபுவனையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள், தாங்களை வெளி இடங்களுக்கு செல்ல அனுமதிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனை, திருவண்டார்கோவில் பகுதியில் கடந்த 1-ந் தேதி தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் வீட்டை சுற்றிலும் உள்ள சுமார் 1200 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக அந்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேறவும், வெளியில் இருந்து அந்த பகுதிக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டாக்டர்கள், சுகாதார துறை பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ளவர்களை மருத்துவ பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

போலீசாருடன் வாக்குவாதம்

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், தங்களை மற்ற பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கவேண்டும் என்று நாள் தோறும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரையின்படி வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும். மே 8-ந் தேதி வரை தனிமைப்படுத்துதல் தொடரும். எனவே பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றனர்.

தொடர்ந்து 28 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து மக்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகள் உணவின்றி தவிக்கிறது. எனவே தனிமைப்படுத்தலை விலக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோல் திருவண்டார்கோவில், திருக்கனூர் பகுதியிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள், தங்களை மற்ற பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story