தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22 பேரில் 21 பேர் வேலூர் கொணவட்டம், சைதாப்பேட்டை, கஸ்பா, சின்னஅல்லாபுரம், ஆர்.என்.பாளையம், கருகம்பத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். அதையடுத்து அந்த பகுதிகள் கடந்த 18-ந் தேதி முதல் ‘சீல்’ வைக்கப்பட்டு, தனிமை மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 6 பகுதிகளிலும் பால், காய்கறி, மளிகைப்பொருட்கள் வாகனங்களில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதிகளை உதவி கலெக்டர் நிலையில் உள்ள அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான கொணவட்டம், கஸ்பா, ஆர்.என்பாளையம், சின்னஅல்லாபுரம் ஆகிய பகுதிகளை நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அந்த பகுதிகளில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா?, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா?, பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறார்களா? என்று கண்காணிப்பு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கலெக்டர் அப்பகுதி மக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்கிறதா என்றும் அவர்களின் குறைகள், கோரிக்கைகளை கேட்டார். பின்னர் அவர் அப்பகுதி மக்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இங்கு பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story