கோவில்பட்டி பகுதியில் 1,236 பேருக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டி பகுதியில் 1,236 பேருக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 30 April 2020 4:15 AM IST (Updated: 29 April 2020 10:30 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பகுதியில் 1,236 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் இந்திய மருத்துவ சங்கம் ஏற்பாட்டில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ 300 தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கினார்.

பின்னர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவர் வடாவ்கர் பீனா ஏற்பாட்டில், நகரசபை அலுவலக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 500 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கினார்.

தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், ஏழைகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் 135 பேருக்கும், வானரமுட்டியில் 85 பேருக்கும், கழுகுமலையில் 307 பேருக்கும், செட்டிக்குறிச்சியில் 60 பேருக்கும், கயத்தாறில் 528 பேருக்கும், கடம்பூரில் 99 பேருக்கும், சிதம்பராபுரத்தில் 22 பேருக்கும் என மொத்தம் 1,236 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., நகரசபை ஆணையாளர் ராஜாராம், என்ஜினீயர் கோவிந்தராஜ், சுகாதார அலுவலர் இளங்கோ, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, சீனிவாசன், சசிகுமார், கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் ஜோதிபாசு, மாடசாமி என்ற மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story