கவுந்தப்பாடியில் நடமாடும் பரிசோதனை மையம் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்


கவுந்தப்பாடியில் நடமாடும் பரிசோதனை மையம் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 April 2020 4:45 AM IST (Updated: 29 April 2020 11:40 PM IST)
t-max-icont-min-icon

கவுந்தப்பாடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள நடமாடும் பரிசோதனை மையத்தை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.

கவுந்தப்பாடி, 

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கவுந்தப்பாடியில் நடமாடும் பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு நடமாடும் பரிசோதனை மையத்தின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் போலீசார், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் பாவா தங்கமணி, துணைத்தலைவர் தீபிகா, புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story