விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஊராட்சி சார்பில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பணி நடந்து கொண்டிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கிருந்த பணியாளர்களை எச்சரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தூர்வாரும் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்து விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல தொரவலூர் கிராமத்திலும் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. அப்போது தனிநபர் ஒருவர் வீட்டின் முன்பு ஆக்கிரமிப்பு அகற்றிய போது அந்த நபர் அதனை தட்டிக் கேட்டார். இதனால் பொக்லைன் எந்திர ஆபரேட்டருக்கும், தனி நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர்.

Related Tags :
Next Story