புவனகிரி, விருத்தாசலம் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


புவனகிரி, விருத்தாசலம் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 April 2020 3:35 AM IST (Updated: 30 April 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி, விருத்தாசலம் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புவனகிரி,

கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கீரப்பாளையத்தில் நடைபெற்றது. இதற்கு கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமு, சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்க துணைத்தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீரப்பாளையம் ஒன்றிய கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜா, ஆசைத்தம்பி, மாவட்ட பிரதிநிதி சுகந்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருப்பன், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் அண்ணாதுரை, மதுராந்தகநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா சாரதி ஜெயராஜ், வீரமுத்து, செந்தில், கானூர் பாலசுந்தரம், ராமலிங்கம், அண்ணா ராமலிங்கம், வள்ளி, தில்லை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி

பண்ருட்டியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இதற்கு நகரசபை ஆணையர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் சத்யா பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 203 துப்புரவு பணியாளர்களை ரோஜாப்பூ தூவி வரவேற்றார். பின்னர் அவர்களுக்கு சொந்த செலவில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். இதில் நகராட்சி என்ஜினீயர் சிவசங்கரன், துப்புரவு அலுவலர் பாக்கியநாதன், ஸ்ரீஅன்பு, அம்மா அறக்கட்டளை சீனுவாசன், செந்தில் முருகா, கூட்டுறவு சங்க தலைவர் ராம்குமார், நகராட்சி பணி மேற்பார்வை அலுவலர் சாம்பசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புவனகிரி

புவனகிரியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு புவனகிரி நகர தி.மு.க. செயலாளர் பூக்கடை கந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் அப்துல்லா, செல்லப்பாண்டியன், முன்னாள் நகர அவைத்தலைவர் நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்து கொண்டு ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் நகர பொருளாளர் எழில்வேந்தன், ஒன்றிய துணை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர், தி.மு.க. நிர்வாகி நம்பிராஜன், குமராட்சி முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம், மில் செல்வராஜ், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோர் இணைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வங்கி கிளை மேலாளர் கண்ணன் தலைமையில், அரசு மருத்துவர் எழில், குழந்தைகள் நல மருத்துவர் மூவேந்தர் ஆகியோர் முன்னிலையில் அரசு மருத்துவமனையில் உள்ள 32 துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களுக்கு நிவாரணம் வழங்கினார். இதில் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் அடுத்த ரம்ஜான் தைக்காலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது. இதில் நகர தலைவர் அன்வர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சானு ஜாக்கீர், நிர்வாகி மானியம் ஆடூர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேங்க் ஆப் இந்தியா

சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வங்கி கிளை மேலாளர் ராகவேந்திர குண்டேரை கல்கரனி தலைமை தாங்கினார். துணை மேலாளர் புஷ்பா தேவி, குமாரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மாயகிருஷ்ணன், துணைத்தலைவர் குமாரி முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். முடிவில் ஊராட்சி செயலாளர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார். 

Next Story