கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் ஊரடங்கை மீறி திறந்திருந்த கடைகளுக்கு ‘சீல்’


கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் ஊரடங்கை மீறி திறந்திருந்த கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 30 April 2020 4:12 AM IST (Updated: 30 April 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் ஊரடங்கை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் கடைகளை தவிர வேறு கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையை நேற்று காலை 8 மணிக்கே திறந்து வைத்து இருப்பதாக தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தாசில்தார் ரகோத்தமன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஜவுளிக்கடை திறந்து இருந்ததால், அதனை பூட்டி ‘சீல்’ வைத்தார்.

.இதே போல் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 3 இரும்பு கடை உள்பட மேலும் 4 கடைகளையும் அதிகாரிகள் பூட்டிவிட்டு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை கடை வீதியில் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் திறந்து இருந்த 30-க்கும் மேற்பட்ட இதர கடைகளை அதிகாரிகள் நேற்று முன்தினம் பூட்டி சீல் வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை உளுந்தூர்பேட்டை கடைவீதியில் சட்டவிரோதமாக திறந்து இருந்த 2 ஹார்டுவேர் கடைகள் மற்றும் ஒரு துணிக்கடையை தாசில்தார் காதர் அலி தலைமையிலான வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துமாறு போலீசாரை குமரகுரு எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை-சென்னை சாலை மற்றும் திருவெண்ணைய்நல்லூர் சாலை முழுவதுமாக முடக்கப்பட்டு தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 170 வாகனங்களை உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story