கீழ்வேளூர், வேதாரண்யத்தில் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழை
கீழ்வேளூர், வேதாரண்யத்தில் 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
சிக்கல்,
கீழ்வேளூர், வேதாரண்யத்தில் 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
கீழ்வேளூர்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் கீழ்வேளூர், தேவூர், வடக்காலத்தூர், காக்கழனி, வலிவலம், கிள்ளுக்குடி, சிக்கல், ஆழியூர், சாட்டியக்குடி, இறையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது.
இந்த மழை 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. மழையின்போது பலத்த காற்றும் வீசியது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக நாகை-திருவாரூர் சாலையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
வேதாரண்யம்
வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் தோப்புத்துறை, தேத்தாகுடி, கள்ளிமேடு, செம்போடை, ஆறுகாட்டுத்துறை, தென்னம்புலம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. மழையின்போது பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின் இணைப்புகளில் சேதம் ஏற்பட்டது. பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
காய்கறி பயிர்
வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள் தற்போது கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலை, கொத்தவரை உள்ளிட்ட காய்கறி பயிர்களையும், கிழங்கு வகைகளையும் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்.
இந்த பயிர்களுக்கு கோடை மழை மிகவும் பலனளிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
Related Tags :
Next Story