கிராமிய கலைஞர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தை சேர்ந்த கிராமிய கலைஞர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரவீன்நாயர் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தை சேர்ந்த கிராமிய கலைஞர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரவீன்நாயர் கூறினார்.
நிதி உதவி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக கிராமிய கலைகளை போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில், இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 வீதம் 500 கலைஞர்களுக்கும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் 100 கலைக்குழுக்களுக்கும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலம் நிதி உதவி வழங்கப்படும்.
அதன்படி நாகை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம். 16 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட கலைஞர்கள் அனைவரும் இந்த நிதி உதவி பெறலாம்.
விண்ணப்பம்
மேலும் கலைக்குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தை பதிவு செய்திருத்தல் வேண்டும். விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்கள் சுய முகவரியிட்ட உறையில் ரூ.10 தபால் தலை ஒட்டி, உறுப்பினர்- செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், 31. பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600 028. என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரிலும் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story