நாங்குநேரி அருகே ஆலங்கட்டி மழை சிறுவர்கள் உற்சாகம்
நாங்குநேரி அருகே திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
நாங்குநேரி,
நாங்குநேரி அருகே திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஆலங்கட்டி மழை
நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியது. பின்னர் மாலை 4.30 அளவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது.
இதேபோல் நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சி பகுதியில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை பார்த்த சிறுவர்கள் அந்த கட்டிகளை தங்கள் கைகளில் எடுத்து உற்சாகம் அடைந்தனர். களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு பகுதியிலும் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் ஒருசில வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தது. இதேபோல் மானூர் பகுதியிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் மேக கூட்டங்கள் ஒன்று சேர்ந்து கருமேகங்களாக காட்சி அளித்தது. பின்னர் திடீரென்று மழை பெய்தது. நெல்லை சந்திப்பு பகுதிகளில் பலத்த மழையாகவும், மாநகரின் மற்ற பகுதிகளில் லேசான மழையாகவும் பெய்தது. இதனால் நெல்லை சந்திப்பில் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேர்வலாறு அணை- 7, சேரன்மாதேவி, கருப்பாநதி அணை- 1, குண்டாறு அணை- 2, அடவிநயினார் அணை- 6, ஆய்குடி- 1.20, சங்கரன்கோவில்- 1, சிவகிரி- 24.
Related Tags :
Next Story