துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்
துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
திண்டுக்கல்,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே வெளிநாட்டில் இருந்து திண்டுக்கல் 8-வது வார்டு பகுதிக்கு வந்த 8 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே அந்த 8 குடும்பத்தினரை கடந்த 28 நாட்களாக தனிமைப்படுத்தி அனைத்து உதவிகளையும் செய்து கவனித்து வந்ததுடன், திண்டுக்கல் 1-வது மண்டத்திற்கு உட்பட்ட 4, 5, 6, 7, 8-வது வார்டு பகுதிகளை சிறப்பாக கவனித்து வரும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கேசவனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு, கேசவனுக்கு தங்க நாணயம் பரிசாக அளித்து கவுரவித்தார்.
அதன்பிறகு அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் 8-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 1,000 பேருக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் என்ற பிரேம் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story