கொடைக்கானல் பகுதியில் மலை வாழைப்பழங்கள் தேக்கம்
ஊரடங்கால் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால், கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் மலை வாழைப்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளன.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பெருமாள்மலை, அடுக்கம், வடகவுஞ்சி, பெரும்பள்ளம், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர் பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ குணமுள்ள இந்த மலை வாழைப்பழங்கள், வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும் பல்வேறு கோவில்களிலும் பஞ்சாமிர்தம் தயாரிக்கவும் கொடைக்கானல் பகுதி மலை வாழைப்பழங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் இந்த மலை வாழைப்பழங்களை வாங்கிச் செல்வார்கள்.
இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மழை வாழைப்பழங்கள் விற்பனை குறைந்தது. ஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டதின் காரணமாக வியாபாரிகள் மலை வாழைப்பழங்களை கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் வாழைப்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டாமல் மரங்களிலேயே விட்டுவிட்டனர். இதனால் தற்போது மழை வாழைப்பழங்கள் மரத்திலேயே பழுத்து வீணாகி வருகின்றன. இதனால் தங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
நிவாரணம்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மலை வாழைப்பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அவை தோட்டங்களில் தேக்கம் அடைந்துள்ளன.
இதனால் மலை வாழை விவசாயத்தை நம்பியுள்ள ஏராளனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு மலை வாழைப்பழங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு, குளிர்பதன கிடங்குகள் அதிக அளவில் அமைக்க வேண்டும். மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story