காட்பாடியில் பலத்த மழை: தற்காலிக உழவர் சந்தையில் குளம்போல் தேங்கிய மழைநீர்


காட்பாடியில் பலத்த மழை: தற்காலிக உழவர் சந்தையில் குளம்போல் தேங்கிய மழைநீர்
x
தினத்தந்தி 30 April 2020 10:42 AM IST (Updated: 30 April 2020 10:42 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் பலத்த மழை: தற்காலிக உழவர் சந்தையில் குளம்போல் தேங்கிய மழைநீர்.

காட்பாடி,

காட்பாடியில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கியது. காட்பாடி டான் போஸ்கோ மெட்ரிக்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தற்காலிக உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் குளம்போல் நேற்று மழைநீர் தேங்கி நின்றது. அதனால் உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்த வியாபாரிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து காட்பாடி தாசில்தார் பாலமுருகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக விளையாட்டு மைதானத்தில் இருந்து எதிரே உள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உழவர் சந்தையை மாற்றும்படி கூறினார்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கொண்டுவந்த காய்கறிகளை அங்கே கொண்டு சென்று வைத்தனர். அதன்பின்னர் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் அந்த வளாகத்தில் காய்கறிகளை வாங்கி சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்காலிக உழவர்சந்தை செயல்பட்டு வந்த மைதானத்திலிருந்து மழைநீரை வெளியேற்றும் வரை இந்த மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை செயல்படும் என தெரிவித்தனர்.

Next Story