சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை
புதுக்கோட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜ.க. சார்பில் நடந்தது.
புதுக்கோட்டை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் சிலர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜ.க. சார்பில் நடந்தது. அப்போது பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் குடை வழங்கப்பட்டது. அந்த குடையை பயன்படுத்தி பொதுமக்கள் இடைவெளி விட்டு வரிசையாக நின்றனர். அவர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அதன்பின் குடையை திரும்ப வாங்கிக்கொண்டு அடுத்த நபர்களுக்கு கொடுத்து இதே நடைமுறையை கடைபிடித்தனர்.
Related Tags :
Next Story