ஏழை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கிய பள்ளி தலைமையாசிரியர்


ஏழை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கிய பள்ளி தலைமையாசிரியர்
x
தினத்தந்தி 30 April 2020 12:13 PM IST (Updated: 30 April 2020 12:13 PM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம், 

ஜெயங்கொண்டம் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், செலவுக்கு கூட பணம் இல்லாமலும் வீட்டில் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.500 வீதம் பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி வழங்கினார். 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் காந்தி நகரில் வசிக்கும் ஏழை மாணவர்கள் 39 பேருக்கு தலா ரூ.500 வீதம் நேற்று பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி, மாணவர்களின் வீடு தேடிச்சென்று சமூக இடைவெளியை கடை பிடித்து மாணவர்களை வரிசையில் நிற்கவைத்து வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவவும் அறிவுறுத்தினார்.


Next Story