பலத்த காற்று: தனுஷ்கோடி சாலையை கடல் மணல் மூடுகிறது


பலத்த காற்று: தனுஷ்கோடி சாலையை கடல் மணல் மூடுகிறது
x
தினத்தந்தி 1 May 2020 4:15 AM IST (Updated: 1 May 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

பலத்த காற்று காரணமாக தனுஷ்கோடி கடற்கரை சாலையை கடல் மணல் மூடி வருகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம், கம்பிப்பாடு, அரிச்சல்முனை சாலை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் முகுந்தராயர்சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை வரை சாலையே தெரியாத அளவிற்கு பல இடங்களில் கடற்கரை மணல் காற்றில் அடித்து வரப்பட்டு, சாலையை மூடிவருகிறது. இதை அந்த வழியாக சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வரும் மீனவர்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர்.

மேலும் கடல் சீற்றம் காரணமாக அரிச்சல்முனை பகுதியில் கடல் நீர் கரையை நோக்கி அதிக தூரம் வருவதால், மணல் பரப்பு பகுதி நாளுக்குநாள் குறைந்து கொண்டே செல்வதும் குறிப்பிடத்தக்கது.

Next Story