கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த மேலும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த மேலும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 1 May 2020 3:30 AM IST (Updated: 1 May 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த மேலும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 339 பேரின் உமிழ்நீர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் 26 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று முன்தினம் மேலும் 2 பேர் வீடு திரும்பினர். இதனால் 6 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதற்கிடையில் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி கோவிலுக்கு சென்று வந்த கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த 68 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

6 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்து நேற்று அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்புடன் திரும்பினர். நேற்று 750 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டிய நிலையில், 302 பேருக்கு முடிவுகள் வந்தது. அதில் யாருக்கும் நோய் பாதிப்பு இல்லை.

இன்னும் 448 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும். நேற்று 339 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சிதம்பரம், புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 787 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story