கடலூர் முதுநகர் அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
கடலூர் முதுநகர் அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர்,
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனிடையே போதைக்காக மாற்று வழிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சாராயம் காய்ச்சும் செயல்களும் ஆங்காங்கே தலைதூக்கி உள்ளன.
அந்த வகையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள வடுகப்பாளையம் பகுதியில் சிலர் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 பேர் கைது
இதையடுத்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் வடுகப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்து பார்த்தபோது, 2 வாலிபர்கள் குக்கரில் சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
இதையடுத்து வீட்டில் இருந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பழனிவேல் மகன் மணி கண்டன்(வயது 28), வெள்ளிமலை மகன் ரஜினி (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சாராய ஊறலையும் கைப்பற்றிய போலீசார் அவற்றை கீழே கொட்டி அழித்தனர்.

Related Tags :
Next Story