விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை


விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
x
தினத்தந்தி 30 April 2020 10:36 PM GMT (Updated: 2020-05-01T04:06:41+05:30)

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அறிவுரை

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் முறைகள் குறித்தும் ஊரடங்கினால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்துத்துறைசார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள், மேலும் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டறிந்து, ஆலோசனை நடத்தியதோடு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்.


Next Story