பல் மருத்துவ தொழிலை அனுமதிக்க நடவடிக்கை - முதல்-மந்திரிக்கு மந்திரி சுரேஷ்குமார் கடிதம்
பல் மருத்துவ தொழிலை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்-மந்திரிக்கு மந்திரி சுரேஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. கர்நாடக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி அனுமதி பெற்றுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த சமூகத்திற்கு மிக அவசியமான முடி திருத்தகம் அதாவது சலூன் மற்றும் பல் மருத்துவமனை ஆகியவற்றை திறக்க அனுமதிக்க வேண்டியது மிக முக்கியம். இந்த தொழிலில் சமூக விலகலை பின்பற்றுவது என்பது மிகவும் கடினம். இதனால் வைரஸ் தொற்று பரவாது என்று சொல்ல முடியாது. இந்த தொழிலில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொண்டு, தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.
வழிகாட்டுதல்கள்
ஏனென்றால் அந்த தொழில்களை நம்பி இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலன் கருதி, சில வழிகாட்டுதல்களை வகுத்து, பல் மருத்துவ தொழிலை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story