மேற்கு தொடர்ச்சி மலையில் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு - வனத்துறை அதிகாரி தகவல்


மேற்கு தொடர்ச்சி மலையில் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு - வனத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 1 May 2020 5:28 AM IST (Updated: 1 May 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளனர். இந்த வன விலங்குகள் குறித்து ஆண்டுக்கு ஒருமுறை கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வனப்பகுதியில் வன விலங்குகள் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது. மேலும் வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் அடிக்கடி சோதனை நடத்தி வருவதால் விலங்குகள் வேட்டையாடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக யானை,புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

Next Story