நாகை தபால் கோட்டத்தில், ஊரடங்கு நேரத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ரூ.1½ கோடி பரிவர்த்தனை
நாகை தபால் கோட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ரூ.1½ கோடி பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதாக நாகை தலைமை தபால் கோட்ட கண்காணிப் பாளர் பஞ்சாபகேசன் கூறி உள்ளார்.
நாகப்பட்டினம்,
நாகை தபால் கோட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ரூ.1½ கோடி பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதாக நாகை தலைமை தபால் கோட்ட கண்காணிப் பாளர் பஞ்சாபகேசன் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணம் பெறும் சேவையை கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சேவை மூலமாக திருவாரூர், நாகை தலைமை தபால் நிலையங்கள் மற்றும் அதனை சார்ந்த தபால் நிலையங்கள், காரைக்கால் பகுதியில் உள்ள தபால் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பணம் வழங்கப்படுகிறது.
எந்தவித கட்டணமும் இல்லாமல் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இது ஏ.டி.எம். பரிவர்த்தனையாக கணக்கிடப்படாது. நாகை கோட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையின் மூலமாக இதுவரையில் 6 ஆயிரத்து 676 கணக்குகள் மூலம் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பில் பரிவர்த்தனை நடந்துள்ளது.
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கி வரும் இந்த ஆதார் எண் இணைக்கப்பட்ட பிற வங்கி கணக்கில் இருந்து பணம் பெறும் சேவையை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story