தமிழக-ஆந்திர எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியை அமைச்சர் ஆய்வு


தமிழக-ஆந்திர எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 1 May 2020 9:45 AM IST (Updated: 1 May 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-ஆந்திர எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியை அமைச்சர் நிலோபர் கபீல் ஆய்வு.

வாணியம்பாடி,

கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 பேர் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 17 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடுகளுக்குத் திரும்பினர். இருப்பினும், அவர்கள் மேலும் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்க வாணியம்பாடி பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு அண்டை மாநிலத்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தினர், திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் நுழையக்கூடாது என்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று காலை தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள கொத்தூர் சோதனைச் சாவடியை அமைச்சர் நிலோபர் கபீல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகள், சுகாதாரப் பணிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பிற மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கும், வாகனங்களுக்கும் முழுமையாக கிருமி நாசினி தெளித்து அனுப்ப வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன், தனிப்பரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story