தொட்டியம் அருகே சித்தாள் வேலைக்கு சென்ற சிறுமி கடத்தல் கொத்தனார் மீது போலீசில் புகார்


தொட்டியம் அருகே சித்தாள் வேலைக்கு சென்ற சிறுமி கடத்தல் கொத்தனார் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 1 May 2020 9:48 AM IST (Updated: 1 May 2020 9:48 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே சித்தாள் வேலைக்கு சென்ற சிறுமியை கடத்தியதாக கொத்தனார் மீது பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தொட்டியம், 

தொட்டியம் அருகே சித்தாள் வேலைக்கு சென்ற சிறுமியை கடத்தியதாக கொத்தனார் மீது பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சிறுமி கடத்தல்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் குடித்தெருவை சேர்ந்தவர் சேவுகன். இவரது மகன் ரவிக்குமார்(வயது 32). பி.எட் பட்டதாரியான இவருக்கும், கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியை சேர்ந்த ராஜாமணி(30) என்பவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால் அப்பகுதியில் நடைபெறும் கட்டிடங்களில் கொத்தனார் வேலைக்கு ரவிக்குமார் சென்று வந்தார். அப்படி வேலைக்கு சென்ற இடத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் சித்தாளாக வேலை பார்த்து வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

புகார்

இந்நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி வேலைக்கு சென்ற தனது மகளை காணவில்லை, அவரை ரவிக்குமார் கடத்தி சென்றுவிட்டதாக சிறுமியின் தந்தை தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார் மற்றும் சிறுமியை தேடி வருகின்றனர்.


Next Story