ஊரடங்கினால் போலீசாருக்கு பயந்து சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள்


ஊரடங்கினால் போலீசாருக்கு பயந்து சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 1 May 2020 12:13 PM IST (Updated: 1 May 2020 12:13 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கினால் போலீசாருக்கு பயந்து வாகன ஓட்டிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர்.

செந்துறை, 

ஊரடங்கினால் போலீசாருக்கு பயந்து வாகன ஓட்டிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர்.

ஊரடங்கு

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கை அமல் படுத்துகின்றனர். அதன்படி தமிழகத்திலேயே முதல் முறையாக வாரத்தில் ஒரு நாள் முழு ஊரடங்கையும், வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லவேண்டும் என்று கிராம மக்களுக்கு அடையாள அட்டை வழங்கி முன்னோடியாக ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரின் கடும் நடவடிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் அவசியம் இல்லாமல் சுற்றித் திரிபவர்கள் எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சைக்கிளில் செல்கின்றனர்

இந்த நிலையில் போலீசார் 5,211 வழக்குகளை பதிவு செய்து, 5,244 பேரை கைது செய்தனர். மேலும் 4,685 இருசக்கர வாகனங்களையும், 78 நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தற்போது பழைய முறைப்படி அதாவது தேவைகளுக்காக நடை பயணமாகவும், சைக்கிளிலும் வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு சமூக இடைவெளியும் அரியலூர் மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப் படுகிறது.

Next Story